நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அவர்களின் பண்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக விளையாட்டுக்கழகங்களுக்கு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
வெண்ணிலா விளையாட்டு கழகத்தின் புனரமைப்பிற்க்காக ஒரு இலட்சம் ரூபாவும், வெற்றிலை கேணி சென் செமபஸ்ரியர் விளையாட்டு கழகம், ஆழியவளை
அருணோதயா விளையாட்டு கழகம், உடுத்துறை
பாரதி விளையாட்டுக் கழகம்,
நாகர்கோவில் நாகதீபம் விளையாட்டு கழகம் ஆகியவற்றிக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர் கு.பிரபாகரமூர்த்தி தலமையில் நேற்று (27) இடம் பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் மற்றும் பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர்களான ஆ.சுரேஸ்குமார்,சி.பிரசாத், வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கிராம சேவகர்கள், அதிகாரிகள், விளையாட்டு கழகங்களின் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.