9 ஆவது பாராளுமன்றத்தின் பாராளுமன்ற உறுப்பினராக கருணாரத்ன பரணவிதான இன்று (03) சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.
இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக இருந்த தலதா அத்துகோரள இராஜினாமா செய்ததன் காரணமாக ஏற்பட்ட வெற்றிடத்திற்காக இவர் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள தனது பதவியை இராஜினாமா செய்வதாக கடந்த ஓகஸ்ட் மாதம் 21 ஆம் திகதி பாராளுமன்றத்திற்கு அறிவித்தார்.
பாராளுமன்றத்தில் உணர்வுப்பூர்வமான உரையை ஆற்றிய அவர், ஐக்கிய தேசியக் கட்சி பிளவுபடுவதில் தமக்கு விருப்பம் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.
தலதா அத்துகோரள ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்த மறைந்த காமினி அத்துகோரலவின் சகோதரி ஆவார். அவர் 2004 இல் முதன்முதலில் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டார்.
இதேவேளை, கடந்த 2020 ஓகஸ்ட் மாதம் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் கருணாரத்ன பரணவிதான 36,787 வாக்குகளைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.