பொலிஸாருக்கு கடமைகளை மேற்கொள்ள துவிச்சக்கர வண்டி!
மேல் மாகாணத்தில் பொலிஸாருக்கு துவிச்சக்கர வண்டி வழங்கிவைக்கப்பட்டுள்ளது. சூழலியல் பொலிஸார் தமது கடமைகளை மேற்கொள்ள துவிச்சக்கர வண்டி வழங்கிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பொலிஸாருக்கு பணியினை மேற்கொள்ள துவிச்சக்கர வண்டி வழங்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பதிவுகள் பகிரப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு துவிச்சக்கர வண்டி வழங்குவது வழமையான நடவடிக்கை எனவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக துவிச்சக்கர வண்டி வழங்கப்பட்டதாக பகிரப்படும் தகவல்கள் பொய்யானவை என பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.