எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள மலையக வேட்பாளர் மயில்வாகனம் திலகராஜாவின் தேர்தல் விஞ்ஞாபனம் பின்வரும் வாசகங்களை உள்ளடக்கி வெளியிடப்பட்டுள்ளது.
“நாங்கள் வெல்வதற்காக அல்ல சொல்வதற்காக களம் காண்பவர்கள். இந்த ஜனாதிபதித் தேர்தலில் எமது உரிமைக் கோரிக்கைகளை தேசிய கொள்கை வகுப்பாளர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் வெற்றி பெறுவார்கள் என கருதப்படும் பிரதான வேட்பாளர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் எமது உரிமைக் கோரிக்கைகளை முன்வைத்து வருகிறோம்.”
* எதிர்வரும் செப 7 ஆம் திகதி எமது கொள்கைப். பத்திரம் மடகொம்பரை தோட்டத்தில் அமையப் பெற்றுள்ள லயன் அறையில் தொழிலாளர் தோழர்களுக்கு கையளிக்கப்படுவதன் மூலம் பொது வெளிக்கு க் கொண்டு வரப்படும்.
* எதிர் வரும் செப் 9 ஆம் திகதி M12M ஒழுங்கு செய்யும் ஏனைய வேட்பாளர்கள் உடன் இடம்பெறும் விவாத மேடையில் கலந்து கொண்டு அவர்களிடையே பகிரப்படும்.
* எதிர்வரும் 10 ஆம் திகதி ( மாலை 3 மணி) அரச ஊடக மையத்தில் இருந்து நேரலையாக சகல ஊடகங்களின் ஊடாக நாட்டு மக்கள் அனைவருக்குமாக மூன்று மொழிகளிலும். எழுத்து வடிவத்திலும் உரையாகவும் வழங்கப்படும். மூன்று மொழிகளிலும் ஊடகவியலாளர் எழுப்பும் கேள்விகளுக்கு பதில் வழங்கத் தயார் என அறிவித்து உள்ளோம்.
* அதனைத் தொடர்ந்து நாடளாவிய ரீதியில் எங்களால் இயலுமான வரையில் எமது தேர்தல் கொள்கை அறிக்கையை கொண்டு செல்வதற்கு முயற்சிக்கிறோம்.
* மலையக மட்டத்தில் ஒவ்வொரு குடியிருப்பாளர்களுக்கும் தபாலில் சேர்ப்பதற்கு இலவச வசதி உள்ளது. ஆனால் அதனை நடைமுறைப்படுத்த பினவரும் ஒத்துழைப்பு வேண்டப்படுகினறது.
1. ஒவ்வொரு தபால் நிலயத்துக்கும் தபாலைப் பொதியாகக் கொண்டு சேர்ப்பதற்கு ( நிலையத்தில் ஒப்படைக்க ) ஜனாதிபதி வேட்பாளரால் நியமிக்கப்படும் முகவராக நீங்கள் முன்வருதல் வேண்டும்.
2. சுமார் மூன்று லட்சம் பிரதிகள் இவ்வாறு அச்சிட உள்ளதால் அவ்வாறு அச்சிட்டு விநியோக்ம செய்ய ஆர்வம் உள்ளவர்க்ள் முன்வரலாம்.
3. இந்த தபாலில் சேர்க்கும் முறைமை மூலம் ‘மலையக முகவரி’ பிரச்சினையை யதார்த்த பூர்வமாக உணரச் செய்ய முடியும். 10 ஆம் திகதிக்கு முன்பதாக இந்தப் பணியை நிறைவு செய்தல் வேண்டும். அதற்கேற்ப முனவருவோர் தயாராதல் வேண்டும்
* எமது கொள்கைகளை ஏற்றுக் கொள்வதன் டையாளம்க உங்களது 3 வது தெரிவாக எமது ‘ சிறகு’ சின்னம் எதிரே ‘3’ என ‘எழுதி’ உங்களது ஒத்துழைப்பை சகோதரத்துவத்தை ( ( Solidarity) இன் மத மொழி பேநகங்கள் கடந்து வெளிப்படுத்துங்கள் என நாட்டின் அனைத்து மக்களிடமும் கோரிக்கை வைக்கின்றோம்.
* இலங்கை மலையகத் தமிழ் மக்களுக்கான உங்களது ஆதரவு வாக்கு எந்த விதத்திலும் பிரதான வேட்பாளர்களின் வாக்குச்ஜசிதறல் ஏற்படாத வகையில் முதல் இரண்டு தெரிவுகளை யும் ( அவர்களில் இருவருக்கு. 1 , 2 என உங்கள் விருப்பத்தின் அடிப்படையில் எழுதலாம்.) வழங்கலாம்.
ஏற்கனவே சிதறுண்டு கிடக்கும் மலையக அரசியலை அறிவார்ந்த அரசியலாக சிறகடிக்கச் செய்வோம். – என்றார்.