சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக சந்திரகுப்த உள்ளிட்ட 7 சந்தேகநபர்களும் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசி மருந்தை கொள்வனவு செய்தமை தொடர்பான விசாரணைகளின் போது அவர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
இதன்படி, குறித்த சந்தேக நபர்களை எதிர்வரும் 17ஆம் திகதி வரை மீளவும் விளக்கமறியலில் வைக்குமாறு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.