தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் ஒழுங்கமைப்பில் சமகால அரசியல் தொடர்பான உரையரங்கு இடம்பெறவுள்ளது.
தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் தலைமையில் நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் இன்று (26) மாலை 3.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.
இவ்வுரையரங்கில் தமிழர் தாயக அபிவிருத்தியில் அரசியலின் வகிபாகம் என்னும் தலைப்பில் சமூகச் செயற்பாட்டாளர் இ.செல்வின், தமிழ்த் தேசிய அரசியலில் சிவில் அமைப்புக்களின் வகிபாகம் என்னும் தலைப்பில் யாழ்.பல்கலைக்கழக ஊடகத்துறை தலைவர் சி.ரகுராம், தமிழ்த் தேசிய அரசியலில் பூகோள அரசியலின் வகிபாகம் என்னும் தலைப்பில் யாழ்.பல்கலைக்கழக அரசறிவியல் துறை தலைவர் கே.ரி.கணேசலிங்கம் ஆகியோர் உரையாற்றவுள்ளனர்.