தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள்கள் கசிந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பரவலான மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆழ்ந்த கவலை தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்ட பிரேமதாச, இந்த பிரச்சினைக்கு தீர்வு காண அதிகாரிகளின் விரைவான நடவடிக்கையின் அவசியத்தை வலியுறுத்தியதுடன், அனைத்து மாணவர்களுக்கும் நியாயத்தன்மையை உறுதிசெய்யும் வகையில் மீள பரீட்சையை நடாத்துமாறு அழைப்பு விடுத்தார்.
இலங்கையின் தேசிய பரீட்சை முறையின் ஒருமைப்பாட்டைப் பேணுவதன் முக்கியத்துவத்தையும் பாதிக்கப்பட்ட மாணவர்களின் கடின உழைப்பையும் எதிர்கால வாய்ப்புகளையும் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து, எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்களைத் தடுக்க கடுமையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பிரேமதாச அரசாங்கத்தை வலியுறுத்தினார்.