தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினுள் இரண்டு கறுப்பாடுகள் என்கிறார் செல்வம் அடைக்கலநாதன்!
தமிழ் தேசிய கூட்டமைப்பு பலமாக இருந்தது இருக்கின்றது. ஆனால் இரண்டு மூன்று கறுப்பாடுகளுடைய செயல்பாடுகளால் மக்களினுடைய மனதில் இருந்து அது குறைந்து வருகின்றது. இதனை அனுமதிக்க முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே
செல்வம் அடைக்கலநாதன் இவ்வாறு தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்
தனிக்கட்சிகளுடைய எந்தவொரு நாட்டாமைத்தனத்திற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்படவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பதிவு செய்யப்பட வேண்டும். இல்லையேல் தமிழ் மக்களை நாம் காப்பாற்ற முடியாது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு
பதிவு செய்யப்படாவிட்டால் அது இல்லாமல் போகும்.
வெறும் உதட்டளவிலேயே தமிழ் மக்களின் விடுதலை தொடர்பில் தற்போது பேசப்படுகிறது. உளப்பூர்வமான விடுதலை தொடர்பாக பேசவில்லை என்பதை இந்த சந்தர்ப்பத்தில் நான் சுட்டிக்காட்ட வேண்டும். மக்களை ஏமாற்றக் கூடாது. நாட்டாமைத்தனம் வேண்டாம்.
தற்போது வந்தவர்கள் தமிழரசு கட்சியையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும்
இல்லாதொழிக்கின்ற செயலை செய்கின்றனர். இதனை ஒரு காலமும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம். 22 இல் இருந்து தற்போது 10 ஆக நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை மாறி உள்ளது என்றார்.