கொழும்பு (Colombo) புறக்கோட்டை மெலிபன் தெருவில் உள்ள வணிக வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
குறித்த தீ விபத்தானது இன்றையதினம்(8) இடம்பெற்றுள்ளது.
கொழும்பு புறக்கோட்டை மெலிபன் வீதியில் உள்ள கட்டிடமொன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கட்டிடத்தின் மூன்றாவதுமாடியில் தீபரவியுள்ளது.
சம்பவ இடத்திற்கு ஏழு தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு கொழும்பு தீயணைப்பு பிரிவினரால் தீ அணைக்கப்பட்டுள்ளது.