இஸ்ரேல் இனப்படுகொலையில் ஈடுபட்டு வருவதாக சர்வதேச நீதிமன்றத்தில் தென்னாபிரிக்க தொடுத்த வழக்க இன்று (11) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது.
காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலை இனப்படுகொலை என அறிவிக்குமாறும் உடனடி போர் நிறுத்தத்தை கோரியும் இந்த வழக்கு தொடரப்பட்டது.
பாலஸ்தீனத்தின் காசா முனை பகுதியை நிர்வகித்து வரும் ஹமாஸ் மீது இஸ்ரேல் போர் தாக்குதல் நடத்தி வருகிறது.
தொடர்ச்சியாக மூன்று மாதங்களாக இடம்பெற்று வரும் இப்போரில் குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட அப்பாவி பொதுமக்கள் பலர் பலியாகியுள்ளனர். தாக்குதல்களில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 23,000-ஐ நெருங்கிவிட்டது.
போரில் பாலஸ்தீனர்களை இஸ்ரேல் இனப்படுகொலை செய்வதாக பரவலாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இந்த குற்றச்சாட்டை இஸ்ரேல் மறுத்தது.
எனினும், காசாவில் இஸ்ரேல் இனப்படுகொலையில் ஈடுபடுவதாக சர்வதேச நீதிமன்றத்தில் தென்னாபிரிக்கா வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கு விசாரணை இன்று ஆரம்பமாகிறது. இந்த வழக்கில் வாதிட சட்டக்குழுவை சர்வதேச நீதிமன்றத்திற்கு இஸ்ரேல் அனுப்பி வைத்துள்ளது.
விசாரணைகளில் முடிவில் இஸ்ரேல் இனப்படுகொலையில் ஈடுபட்டது நிரூபிக்கப்பட்டால், கடும் நெருக்கடியை சந்திக்க நேரிடும் என கூறப்படுகிறது.