பயங்கரவாத தடுப்பு சட்டத்துக்கு எதிரான கையெழுத்துப் போராட்டம் இன்று மன்னார் பகுதியில் இடம்பெற்றது.
இலங்கையில் உள்ள காட்டுமிரண்டித்தனமான பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை இரத்துச் செய்யக் கோரி ஊர்தி வழியாக நாடளாவிய ரீதியில் கையெழுத்துப் பெறும் போராட்டம் யாழ்ப்பாணத்தில் கடந்த 10ம் திகதி ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இன்று மன்னார் பகுதியில் இடம்பெற்ற போராட்டத்தில் பல பொதுமக்கள் கலந்துகொண்டு பயங்கரவாத தடுப்பு சட்டத்தை நீக்குமாறு கோரி கையெழுத்திட்டனர்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியினுடைய வாலிபர் முன்னணி,சர்வஜன நீதி அமைப்பு, தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புக்களின் கூட்டமைப்பும் இணைந்து முன்னெடுக்கும் இந்தக் கையெழுத்துத் திரட்டும் போராட்டத்திற்கு மக்கள் பலத்த ஆதரவு வழங்குகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.