தீவிரமடையும் போர்க்களம்! இஸ்ரேலுடன் கூட்டு சேரும் மூன்று நாடுகள்!
ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் எல்லையில் கடும் தாக்குதலை முன்னெடுத்துள்ள நிலையில், மேற்கத்திய நாடுகள் பல தங்கள் ஆதரவை இஸ்ரேலுக்கு அறிவித்துள்ளன.
தற்போது ஜேர்மனி மற்றும் அமெரிக்காவுக்கு பின்னர் பிரித்தானியாவும் இராணுவ உதவிகளை முன்னெடுக்க தயாராகியுள்ளது.
இஸ்ரேல் இராணுவத்துடன் இணைந்து அமெரிக்க சிறப்பு படைகள் பணியாற்றி வருவதாகவும், ஹமாஸ் படைகளை மொத்தமாக அழிக்க முடிவெடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஜேர்மனி போர்க்களத்தில் பயன்படுத்தும் ட்ரோன் விமானங்களை இஸ்ரேலுக்கு அனுப்பியுள்ளது. ஜேர்மனி பாதுகாப்பு அமைச்சர் Boris Pistorius தெரிவிக்கையில், இஸ்ரேலுடன் எந்த கட்டத்திலும் ஜேர்மனி துணையிருக்கும் என்றார்.
இஸ்ரேலுக்கு ஆதரவாக பிரித்தானியா அரசாங்கம் இராணுவ விமானங்கள், கப்பல் மற்றும் சிறப்பு படையினரையும் அனுப்பி வைக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்கின் அலுவலகம் தெரிவிக்கையில், வெள்ளிக்கிழமை ராயல் நேவி ரோந்து கப்பல்கள், உளவு விமானங்கள் மற்றும் துருப்புக்கள் இஸ்ரேலுக்கு பயணிக்கும் என அறிவித்துள்ளது.
அத்துடன், இஸ்ரேலில் சிக்கியுள்ள பிரித்தானியர்களை வெளியேற்ற விமானங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் எனவும் அரசாங்க தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.