கருவாடு வகைகளின் விலை கடந்த 6 மாதங்களுடன் ஒப்பிடுகையில் 35% முதல் 40% வரை குறைந்துள்ளன என கருவாடு இறக்குமதியாளர்கள் சங்கத்தால் தெரிவிக்கப்படுகிறது.
இதுதொடர்பில் கருவாடு இறக்குமதியாளர்கள் சங்கத்தின் பிரதித் தலைவர் ஆர்.ஜி. வில்சன் தெரிவிக்கையில்
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உலர் மீன்களின் கையிருப்பை உரிய முறையில் பேணப்பட்டமை உள்ளிட்ட பல காரணிகளால் கருவாடுகளின் விலை கணிசமாகக் குறைந்துள்ளது எனத் தெரிவித்தார்.