வெட்டுக்காயங்களுக்கு உள்ளான நிலையில் ஒருவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் வடமராட்சி வல்லிபுரக் குறிச்சி பகுதியில் இன்று (17) இடம்பெற்றுள்ளது.
குறித்த பகுதியில் வெட்டுக்காயங்களுடன் ஒருவர் கிடப்பதாக பொதுமக்களால் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் நபரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளையும் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.