இஸ்ரேல் விவகாரத்தை பிரான்சுக்கு கொண்டுவராதீர்கள் என முஸ்லிம் மதத் தலைவர் கோரிக்கை!
இஸ்ரேல் விவகாரத்தை பிரான்சுக்கு கொண்டுவராதீர்கள் என பரிஸ் பெரிய பள்ளியின் (Grande mosquée de Paris) இமாம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இஸ்ரேலியர்கள் மீது ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, இஸ்ரேல் ஹாசா பகுதி மீது தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. பாலஸ்தீனர்கள் கொல்லப்படுகிறார்கள் என உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். சில நாடுகளில் ஆர்ப்பாட்டங்களும் இடம்பெற்று வருகிறது.
இந்நிலையில், ‘மத்திய கிழக்கு நாடுகளில் இடம்பெறும் விவகாரங்களை பிரான்சுக்குள் கொண்டுவராதீர்கள். பல்வேறு மதங்கள் மற்றும் நம்பிக்கைகள் கொண்ட சமூகங்களுக்கு எதிரான ஆத்திரமூட்டல் அல்லது மோதல்களைத் தவிர்ப்பது கட்டாயமாகும், இதன் மூலம் நாம் பிரான்சில் அமைதியுடனும் நல்லிணக்கத்துடனும் வாழ முடியும்!” என பரிசில் உள்ள பெரிய
பள்ளிவாசலின் இமாம் Abdennour Tahraoui அறிவித்துள்ளார்.
அதேவேளை, “இந்த வெறுக்கத்தக்க போரின் பின்விளைவுகளை உடனடியாக நிறுத்துங்கள்!” எனவும் அவர் அழைப்பு விடுத்தார்.
பிரான்சில் வசிக்கும் இஸ்லாமியர்கள் பல்வேறு பாலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்ள முயற்சித்து வருகின்றனர். ஆனால் அவற்றுக்கு பிரான்ஸ் தடை விதித்துள்ளது. இந்நிலையிலேயே அவர் வெளியிட்ட இந்த அறிவிப்பு மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது.