நாடளாவிய ரீதியில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 2024 க.பொ.த உயர்தர (உ/த) பரீட்சைகளை டிசம்பர் 3 ஆம் திகதி வரை ஒத்திவைக்க பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
பரீட்சைகள் டிசம்பர் 4ம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்றும் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.

நவம்பர் 30, டிசம்பர் 2, டிசம்பர் 3 ஆகிய திகதிகளில் பரீட்சைகளை நடத்துவதில்லை என முடிவு செய்யப்பட்டுள்ளது.
திட்டமிட்ட பாடங்களுக்கான பரீட்சைகள் டிசம்பர் 4ம் திகதி கீழ்கண்ட முறையில் நடத்தப்படும்.
# நவம்பர் 28 வியாழக்கிழமை நடத்தப்படாத பரீட்சை டிசெம்பர் 23ஆம் திகதியன்றும்
#நவம்பர் 29ஆம் திகதி வௌ்ளிக்கிழமை நடத்தப்படாத பரீட்சை டிசெம்பர் 27ஆம் திகதியன்றும்
#நவம்பர் 30ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடத்தப்படாத பரீட்சை டிசெம்பர் 28 சனிக்கிழமையும்
#டிசெம்பர் 2ஆம் திகதி திங்கட்கிழமை நடத்தப்படாத பரீட்சை டிசெம்பர் 30ஆம் திகதி திங்கட்கிழமையும்
#டிசெம்பர் 3ஆம் திகதி வியாழக்கிழமை நடத்தப்படாத பரீட்சை டிசெம்பர் 31ஆம் திகதி செவ்வாய்கிழமையும் நடத்தப்படும்.