ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 6 மணித்தியாலங்களாக ஒரே இடத்தில் நிலை கொண்டு உள்ளது.
இதன் வேகம் மணிக்கு 3 கிலோ மீட்டர் வேகத்தில் குறைந்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மண்டலம் தெரிவித்துள்ளது என இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
அடுத்த 12 மணி நேரத்தில் இது சூறாவளியாக மாறும் வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
30 திகதி வரை தமிழ்நாட்டில் மழை பெய்யக்கூடிய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
இதனால் இனி வரும் 11 மணித்தியாலங்களுக்குள் இலங்கையின் வடகிழக்கு பிரதேசங்களுக்கான கனமழை 200 மில்லி மீட்டருக்கு அதிகமாக பெய்யக்கூடிய தன்மை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.