கிளிநொச்சியில் கிணற்றுக்குள் பெண்ணின் சடலம்!
கிளிநொச்சி அம்பாள் குளம் பகுதியில் கிணற்றுக்குள் பெண்ணின் சடலம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் அப்பகுதி மக்களால் பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். நீதிவான் சடலத்தினை பார்வையிட்ட பின்னர் சடலத்தினை மீட்டு பிரேத பரிசோதனை உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சடலம் மீட்கப்படாத நிலையில் யாருடைய சடலம் என இதுவரை அடையாளம் காணப்படவில்லை. நடந்தது கொலையா தற்கொலையா என பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.