புகையிரதம் மோதி மாணவன் உயிரிழப்பு!
சாவகச்சேரி சங்கத்தானை பகுதியில் புகையிரதம் மோதியதில் உயர்தர மாணவன் உயிரிழந்துள்ளார். சாவகச்சேரி சங்கத்தானை புகையிரத பாதையை கடக்க முற்பட்ட போதே குறித்த மரணம் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பிலிருந்து யாழ் நோக்கி பயணித்த புகையிரதத்துடன் மோதியதில் மாணவன் உயிரிழந்துள்ளார்.இச்சம்பவம் நேற்று மாலை 6 மணியளவில் நிகழ்ந்துள்ளது.
மீசாலை வீரசிங்கம் மகாவித்தியாலய உயர்தர
மாணவனான கொடிகாமத்தைச் சேர்ந்த உதயகுமார் பானுசன் எனும் 18 வயதான மாணவனே உயிரிழந்துள்ளார்.
நாளை பாடசாலையில் நடக்கவிருந்த நிகழ்வுக்கு தைக்க குடுத்திருந்த ஆடையை எடுத்துவரச் சென்ற போதே குறித்த மரணம் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.