மருத்துவர்கள் தவிர்ந்த ஏனைய அனைத்து சுகாதாரத் துறை ஊழியர்களும் எதிர்வரும் 16ஆம் திகதி வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.
சுகாதார துறையில் உள்ள 27 தொழிற்சங்கங்களுடன் இணைந்து இந்த அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.