பிரான்ஸில் அபயாவிற்கு இடமில்லை: ஒருபோதும் அனுமதிக்க முடியாது: திட்டவட்டமான அறிவிப்பு!
பிரான்சின் பிரபல தொலைக்காட்சி மற்றும் வானொலியில் பிரான்சின் பிரபல குற்றவியற்துறைப் பேராசிரியர் அலென் பௌவர் பிரான்சில் பாடசாலைகளில் இஸ்லாமிய ஆடையான அபயா தடையைப் பற்றித் தனது ஆழமான கருத்தை விலியுறுத்தி உள்ளார்.
பாடசாலைக்கு அபயா அணியும் பெண்கள் பிரான்சின் தகமைகளைப் பரிசோதித்துப் பார்க்கிறார்கள். அத்தடன் பிரான்சின் மதசார்பற்ற தகமைகளைக் கேள்விக்கு உள்ளாக்கின்றார்கள்.
அபயா அணிந்து பாடசாலைக்கு வருவது மத உணர்வை மற்றவர்கள் மீது திணிக்கவும் ஆத்திரமூட்டவுமேயாகும்.
அபயாவிற்கு ஆதரவாக பிரான்சின் மதச்சார்பின்மையயைக் கேள்வி கேட்பவர்கள், 1905 இன் சட்டத்தினை முழுமையாகப் படிக்காதவர்களும் தங்களின் எல்லைகளை அறியாதவர்களுமே
உண்மையான மதச்சார்பின்மை என்பது. தனது மத்ததை நம்புவதற்கும், நம்பாமைக்கும், விரும்பிய மதத்தை ஏற்றுக்கெகள்வதற்குமான சுதந்திரத்தை வழங்குகின்றது. ஆனால் எந்த மதமோ அல்லது மத அடையாளமோ மற்றவர்கள் மீது திணிக்கப்படுவதை முற்றாகத் தடை செய்கின்றது
அபயா தங்களின் அடையாளத்தை மற்றவர்கள் மீது திணிப்பதேயாகும்.பாடசாலைகளிற்கும் அபயாவிற்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. இதனை அணிவது முற்றாக பிரான்சின் மதச்சார்பின்மையை எதிர்ப்பதாகும்
மதவாதத்தைத் தூண்டும் அபயாவிற்கு பாடசாலைகளில் இடமில்லை
என பிரபல குற்றவியற் பேராசிரியர் தெரிவித்துள்ளார்.