காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களினால் கவனயீர்ப்பு போராட்டம்!
சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு கிளிநொச்சியில் இருவேறு இடங்களில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களினால் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்க அலுவலகம் முன்பாக ஒரு கவனயீர்ப்பு போராட்டமும் கிளிநொச்சி கந்தசுவாமி கோயில் முன்பாகவும் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
சிறுவர்களாக கையளிக்கப்பட்ட தமது பிள்ளைகளுக்கு நீதி வேண்டி கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.