சட்டவிரோத கசிப்பு வியாபாரத்தில் ஏற்பட்ட கைகலப்பு காரணமாக வீட்டினுள் நுழைந்து ஆவணங்களை தீயிட்டு எரித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உழவனூர் பகுதியிலேயே இன்று காலை இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இருவீட்டாருக்கிடையில் கசிப்பு வியாபாரம் தொடர்பாக ஏற்பட்ட வாய்த்தர்க்கம் காரணமாக வீட்டு உரிமையாளர் இல்லாத சமயத்தில் வீட்டின் ஒரு அறையில் இருந்த முக்கிய ஆவணங்கள் மற்றும் உடு புடவைகள் அனைத்தும் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளதுடன் சமைத்துவைத்த மதிய உணவிலும் விஷம் கலக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக தர்மபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.