By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
PuthujugamPuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • முக்கிய செய்தி
      • வடக்கு மாகாணம்
        • யாழ்ப்பாணம்
        • முல்லைத்தீவு
        • வவுனியா
        • மன்னார்
      • கிழக்கு மாகாணம்
    • உலகச் செய்திகள்
      • புலம்பெயர் தமிழர்கள்
      • இந்திய செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Reading: தாய்வானை உலுக்கிய நிலநடுக்கம்! பலர் மாயம்; மீட்புப் பணிகள் தீவிரம்!
Share
Notification Show More
PuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Follow US
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள

தாய்வானை உலுக்கிய நிலநடுக்கம்! பலர் மாயம்; மீட்புப் பணிகள் தீவிரம்!

Published April 3, 2024
Share
2 Min Read
SHARE

தாய்வான் அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம் இன்று ஏற்பட்டுள்ளது. இதன்போது நிலநடுக்கத்தில் சிக்குண்டு பலர் காணாமல் போயுள்ளதாகவும் மீட்புப் பணிகள் தீவரமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இன்று காலை (03) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.5 ஆக பதிவாகியுள்ள நிலையில் தாய்வான் மற்றும் ஜப்பான் ஆகிய பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 25 ஆண்டுகளில் தாய்வான் மற்றும் அதனைச் சூழ்ந்துள்ள தீவுப்பகுதிகளில் தாக்கப்பட்ட மிக வலுவான நிலநடுக்கமாக இது பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தப் பகுதியில் மீட்புப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், தாய்வானின் ஹுவாலியன் நகரில் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளன.

இந்நிலையில், தாரோகோ தேசிய பூங்காவைச் சுற்றியுள்ள பாதையில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் மூன்று பேர் காயமடைந்துள்ளதாக தாய்வானின் தேசிய தீயணைப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஹுவாலியனுக்கு வெளியே உள்ள ஒரு முக்கிய பள்ளத்தாக்கின் பெயரால் இந்த பூங்காவிற்கு பெயரிடப்பட்டுள்ளது, தவிரவும் ஹுவாலியனில் உள்ள சுரங்கப் பாதையில் பலர் சிக்கியுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜப்பானின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள ஒகினாவா தீவை குறிப்பிட்டு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன் 3 மீட்டர் அளவிற்கு சுனாமி அலை ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் ஜப்பான் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இந்த கடுமையான நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து உடனடியாக தகவல் ஏதும் வெளியாகாத நிலையில், தாய்வானில் கட்டடங்கள் இடிந்து சேதம் அடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

அதேபோல் தாய்வானின் தலைநகர் தைபேயிலும் நிலநடுக்கத்தின் தாக்கம் உணரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது, மேலும் தாய்வானின் ஹுவாலியன் நகருக்கு தெற்கே 18 கிமீ (11 மைல்) தொலைவில் 34.8 கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.4 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் ஜப்பான் நாட்டில் உள்ள தீவுகளையும் தாக்கியுள்ளது, ஜப்பான் நாட்டின் மியாகோ மற்றும் யாயியாமா தீவுகளை முதல் அலை தாக்கியதாக நம்பப்படுகிறது.

இந்நிலையில், இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி பலர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

TAGGED: தாய்வானை உலுக்கிய நிலநடுக்கம்
Editor S.Shanuja April 3, 2024 April 3, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Previous Article ஆவணங்களுக்கு தீ மூட்டி உணவிலும் நஞ்சு கலந்த விஷமிகள்!
Next Article தீ விபத்தில் சிக்கிய சுற்றுலா பஸ் !
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might also Like

Breaking newsஇலங்கைச் செய்திகள்கிளிநொச்சி

பூநகரியில் பயங்கர விபத்து: இரு சிறுமிகள் உட்பட ஐந்து பேர் தீக்காயங்களுடன் படுகாயம்!

June 30, 2025
இந்திய செய்திகள்உலகச் செய்திகள்

செம்மணிப் புதைகுழி பேரவலத்தின் உச்சம்- சீமான் கண்டனம்!

June 30, 2025
உலகச் செய்திகள்

ரஷ்யாவின் நிலைப்பாடு ஏற்க இயலாதது – ட்ரம்புடன் பேசிய பிறகு மேற்கத்திய தலைவர்கள் கண்டனம்!

May 16, 2025
இலங்கைச் செய்திகள்உலகச் செய்திகள்

ராஜபக்சர்களை கடுமையாக விமர்சிக்கும் பிராம்ப்டன் மேயர் பெட்ரிக் பிரவுன்!

May 15, 2025
Previous Next
2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?