காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டம் தடுத்து நிறுத்திய பொலிஸார்!
‘நீதிக்கான அணுகல்’ எனும் தொனிப்பொருளிலான நடமாடும் சேவை இன்று யாழ் மத்திய கல்லூரியில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. இந்நிலையில் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து காணாமல் போனோரின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இன்றைய தினம் காலை பத்து முப்பது மணியளவில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி முன்பாக காணாமல் போனோரின் உறவுகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நீதி அமைச்சின் நடமாடும் செயலமர்வில் காணாமல் போனோர் விவகாரத்தை கையாளக்கூடாது என தெரிவித்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் ‘தள்ளுமுள்ளு’ செயற்பாட்டில் ஈடுபட்டமையை அவதானிக்க கூடியதாக இருந்தது.