மாணவிக்கு ஆபாச வீடியோ அனுப்பிய ஆசிரியர் கைது!
தம்புத்தேகமவில் உள்ள பாடசாலை ஒன்றில் 14 வயதுடைய பாடசாலை மாணவிக்கு ஆபாசமான படங்கள் மற்றும் செய்திகளை அனுப்பிய அதே பாடசாலையின் ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த மாணவியின் பெற்றோர், நன்னடத்தை அலுவலகத்தில் செய்த முறைப்பாட்டையடுத்து சந்தேகத்தின் பேரில் குறித்த ஆசிரியரை பொலிஸார் நேற்று (30) கைது செய்துள்ளனர்.
தம்புத்தேகம பிரதேசத்தை சேர்ந்த 44 வயதான குறித்த ஆசிரியர் இன்று (31) தம்புத்தேகம நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்