பங்கீட்டு அட்டை முறை மூலம் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம்!
எரிவாயு சிலிண்டர்கள் மிக சொற்பமான அளவே தற்போது கிடைக்கின்ற நிலையில், எதிர்காலத்தில் பங்கீட்டு அட்டை முறை மூலம் கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களின் கண்காணிப்பின் கீழேயே அவற்றை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார்.
யாழ் மாவட்ட செயலகத்தில்
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.