By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
PuthujugamPuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • முக்கிய செய்தி
      • வடக்கு மாகாணம்
        • யாழ்ப்பாணம்
        • முல்லைத்தீவு
        • வவுனியா
        • மன்னார்
      • கிழக்கு மாகாணம்
    • உலகச் செய்திகள்
      • புலம்பெயர் தமிழர்கள்
      • இந்திய செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Reading: பெண் குரலில் பேசி பல ஆண்களிடம் பல லட்சம் பணம் பறித்த யாழ் இளைஞன் கைது!
Share
Notification Show More
PuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Follow US
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள

பெண் குரலில் பேசி பல ஆண்களிடம் பல லட்சம் பணம் பறித்த யாழ் இளைஞன் கைது!

Published May 26, 2022
Share
1 Min Read
SHARE

பெண் குரலில் பேசி ஆண்களிடம் பணம் பறித்த 26 வயது இளைஞன் கைது!

கைபேசியில் செயலியை உபயோகித்து பெண் குரலில் பேசி ஏமாற்றி, ஆண்களிடம் பணம் பறித்த குற்றச்சாட்டில் வட்டுக்கோட்டையைச் 26 வயது இளைஞர் ஒருவர் யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் வைத்து நேற்று யாழ் மாவட்ட பொலிஸ
புலனாய்வுப் பிரிவுப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது:-

சுன்னாகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு வந்த கைபேசி அழைப்பில் பெண் ஒருவர் உரையாடியுள்ளார். அதன்பின்னர் அவர்கள் தொடர்ச்சியாக உரையாடியுள்ளனர். பின்னர் அவர்கள் அந்தரங்கப் படங்களைப் பரிமாறிக் கொண்டுள்ளனர்.

அதன்பின்னர் கைபேசியில் பேசிய பெண், அந்த நபரை மிரட்டி ஒன்றரை லட்சம் ரூபா பறித்துள்ளார். அதன்பின்னரும் மிரட்டி ஒரு லட்சம் ரூபா கேட்டுள்ளார். அதில் சந்தேகமடைந்த அந்த நபர், இது தொடர்பில் யாழ்ப்பாணம் மாவட்ட புலனாய்வுப் பிரிவுப் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

கைபேசியில் பேசிய பெண்ணிடம், வங்கியில் பணம் வைப்புச் செய்ய முடியாது என்றும், நேரில் வந்து பெற்றுக்கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டது. யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் பணத்தைப் பெற்றுக்கொள்ள வந்த 26 வயது இளைஞர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

விசாரணையில் அந்த இளைஞரே பெண் குரலில் பேசி ஏமாற்றியமை தெரியவந்துள்ளது. இந்த இளைஞர் ஏற்கனவே நால்வரிடம் இவ்வாறு பேசி நான்கு லட்சம் ரூபாவுக்கும் மேல் பறித்துள்ளமை தெரியவந்துள்ளது என்று பொலிஸார் கூறுகின்றனர்.

கைது செய்யப்பட்ட இளைஞரிடம் இருந்து நான்கு கைபேசிகளும், ஒரு லட்சம் ரூபா பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது. விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படுவார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

TAGGED: பெண் குரலில் பேசி பல ஆண்களிடம் பல லட்சம் பணம் பறித்த யாழ் இளைஞன் கைது!
oira8 January 2, 2024 May 26, 2022
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Previous Article யாழில் அதிகாலையில் கத்திமுனையில் வழிப்பறிக் கொள்ளை!
Next Article பங்கீட்டு அட்டை முறை மூலம் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம்!
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might also Like

Breaking newsஇலங்கைச் செய்திகள்யாழ்ப்பாணம்

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் அகழ்வுப் பணிகள் தொடக்கம் – ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுப்பு

May 15, 2025
இலங்கைச் செய்திகள்யாழ்ப்பாணம்

நெடுந்தீவில் சிறுமி பாலியல் வன்கொடுமை – கர்ப்பம் உறுதி | சந்தேகநபர் கைது

May 14, 2025
இலங்கைச் செய்திகள்யாழ்ப்பாணம்

வடக்கில் கிறீஸ் பூதம்?- ஈ.பி.டி.பி. சந்தேகம்!

March 5, 2025
இலங்கைச் செய்திகள்யாழ்ப்பாணம்

யாழில் வயோதிப பெண் கீழே விழுந்து மரணம்!

March 5, 2025
Previous Next
2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?