தனங்கிளப்பு பகுதியில் உள்ள காற்றாலை ஒன்றின் கோபுர படியில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் தனங்கிளப்பு பகுதியில் உள்ள காற்றாலையின் கோபுர படியில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது என சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
செம்மணி வீதி நல்லூர் பகுதியினைச் சேர்ந்த நாகரத்தினம் இந்துஜன் எனும்27 வயதான இளைஞன் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.