காணாமல் ஆக்கப்பட்ட தனது மகன் பேரன் மருமகனை தேடியலைந்தவர் உயிரிழந்தார்!
வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்ட தனது மகன், மருமகன், பேரன் ஆகிய மூவரைத் தேடி கடந்த 1898 நாட்களாக போராட்டம் நடத்தி வந்த வவுனியா கிறிஸ்தவகுளம் பகுதியை சேர்ந்த தங்கராசா செல்வராணி அம்மா ( 75) நேற்று சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.
இவர் தனது மகன் – தயாபரன், மருமகன் – தியாகராசா, மனோகரன்- பேரன் ஆகியோரைத் தேடி போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார். 2008 ம் ஆண்டு இவரது உறவுகள் காணாமல் ஆக்கப்பட்டனர்.
காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவுகள் 115 பேர் தமது உறவுகளைத் தேடியலைந்து, போராட்டங்களை மேற்கொண்டும் தமது உறவுகளைக் காணாமலேயே உயிரிழந்துள்ளனர்.