நாடளாவிய ரீதியில் நாளை (23) முதல் பண்டிகைக்காலம் முடியும் வரை, விசேட போக்குவரத்து நடவடிக்கை அமுல்படுத்தப்படவுள்ளது.
பயணிகள் போக்குவரத்து பேருந்துகள் உள்ளிட்ட ஏனைய வாகனங்களை சோதனையிடும் விசேட போக்குவரத்து நடவடிக்கையை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாக பயணிகள் போக்குவரத்து பேருந்துகள் உள்ளிட்ட ஏனைய வானங்களால் இடம்பெற்ற விபத்துக்களை கருத்திற்கொண்டு தொடர்ந்து இடம்பெறும் இவ்வாறான விபத்துக்களை குறைப்பதற்காக பதில் பொலிஸ் மா அதிபரின் பணிப்புரைக்கமைய இந்த போக்குவரத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாக அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.