By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
PuthujugamPuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • முக்கிய செய்தி
      • வடக்கு மாகாணம்
        • யாழ்ப்பாணம்
        • முல்லைத்தீவு
        • வவுனியா
        • மன்னார்
      • கிழக்கு மாகாணம்
    • உலகச் செய்திகள்
      • புலம்பெயர் தமிழர்கள்
      • இந்திய செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Reading: ரஷ்யாவின் செயல் மைத்திரியின் ஆட்சி போன்றது; பிள்ளையான் சாடல்!
Share
Notification Show More
PuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Follow US
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள

ரஷ்யாவின் செயல் மைத்திரியின் ஆட்சி போன்றது; பிள்ளையான் சாடல்!

Published March 24, 2024
Share
1 Min Read
SHARE

ரஷ்யாவில் இடம்பெற்ற தாக்குதல் சம்பந்தமாக அமெரிக்க புலனாய்வுத்துறை அறிவித்திருந்த போதிலும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைப் போல் ரஷ்யா செயற்பட்டுள்ளது என கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கினைப்புக் குழு தலைவருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.

“ஈஸ்டர் படுகொலை இன – மத நல்லிணக்கம் அறிதலும் புரிதலும்“ நூல் வெளியிட்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்.

“இலங்கையில் ஈஸ்டர் படுகொலை போன்ற சம்பவங்கள் இனிவரும் காலங்களில் இடம்பெறாமல் இருக்க நாம் எமது சமூகத்தை எவ்வாறு கையாள போகின்றோம், எதிர்காலத்தில் இதனை எவ்வாறு தடுப்பது, தொடர்ந்தும் அமைதியான சூழலை தக்க வைப்பது இந்த சவால்களை எவ்வாறு எதிர்கொள்வது என நாம் சிந்திக்காமல் இருக்க முடியாது.

அந்த வலியையும் வேதனையும்தான் நாம் ஆரம்பத்தில் இந்த புத்தகத்தில் சொல்லி இருக்கின்றோம். தற்போது நாம் எதிர்கொள்ளும் சவால்களை மிகக் கவனமாக கையாள வேண்டிய பொறுப்பு என்னிடம் உள்ளது. சேனல் 4 வெளிநாட்டு ஊடகம் வெளியிட்டுள்ள காணொளி தொடர்பில் சில அரசியல்வாதிகள் எங்களை நோக்கி கை காட்டினார்கள்.

சாதாரண மத பிரிவினர் இவ்வாறொரு பெரிய தாக்குதலை எவ்வாறு நடத்தினார்கள் என்ற சாத்தியத்தை பலரது கேள்விக்கு இந்தப் புத்தகம் பதில் கூறுகின்றது. இந்தக் குண்டு வெடிப்புக்கு பின்னால் உள்ள சக்தி என்ன, நோக்கம் என்ன, அவர்களின் கொள்கைகளை இந்த புத்தகம் வெளிக்கொண்டு வருகின்றது.

எமது நாட்டின் மக்களின் நிலையான சமாதானத்தோடு பொருளாதாரத்திற்காக பாடுபடுகின்ற மக்கள் என்ற அடிப்படையில் ஏனைய அரசியல் கட்சிகள் போன்று நாம் சாதாரணமாக சிந்தித்து விட முடியாது. இந்த மக்களை வழிநடத்துகின்ற அரசாங்கமாகவே நாம் சிந்திக்க வேண்டியுள்ளது.

அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுகின்றவர்கள் என்ற ரீதியில் பாதுகாப்பு உறுதிப்படுத்த வேண்டிய தேவையில் நாங்களும் இருக்கின்றோம்” – என்றார்.

TAGGED: பிள்ளையான் சாடல்!, ரஷ்யாவின் செயல் மைத்திரியின் ஆட்சி போன்றது
Editor S.Shanuja March 24, 2024 March 24, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Previous Article ஓட்டோ மோதி சிறுவன் பலி!
Next Article யானை தாக்கியதில் பெண் உயிரிழப்பு!
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might also Like

இலங்கைச் செய்திகள்கிழக்கு மாகாணம்

மாவீரர் போராளிகள் குடும்ப நல காப்பாகத்தினரல் கிழக்கில் உதவி!

May 25, 2025
இலங்கைச் செய்திகள்யாழ்ப்பாணம்

உடுவில் பகுதியில் இனப்படுகொலை நினைவாக முள்ளிவாய்க்கால் கஞ்சி!

May 18, 2025
இலங்கைச் செய்திகள்செய்திகள்

ஹெரோயின் கடத்தல் வழக்கில் மூன்று பேருக்கு மரண தண்டனை!

May 16, 2025
இலங்கைச் செய்திகள்

யாழில் ஆசிரியரின் மோசமான செயல்!

May 15, 2025
Previous Next
2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?