காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி குடும்பப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் மகியங்கனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அஹயபுர பகுதியில் இன்று (24) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
இதன்போது, 44 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
அதிகாலை 4.30 மணியளவில் தனது வீட்டுப் பகுதிக்கு வந்த காட்டு யானையை விரட்ட முற்பட்ட வேளையில் யானை தாக்கியதில் குறித்த பெண் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் மகியங்கனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.