உக்ரைன் மீது ரஷ்யப் படைகள் உக்கிரமான தாக்குதலை மூன்றாவது நாளாக நடத்திவருகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உக்ரைன் இராணுவத்தின் அதிகமான இராணுவத் தளங்களை ரஷ்ய படைகள் தாக்கி அழித்துள்ளனர்.
தங்களை தற்காத்துக்கொள்ள உக்ரைன் படைகள் பதிலடி கொடுத்துவருகிறது. 3000 இதற்கும் அதிகமான ரஷ்ய இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் உக்ரைன் நாட்டின் ஆட்சி அதிகாரத்தை இராணுவம் கையில் எடுக்க வேண்டும் என்று ரஷ்ய அதிபர் புடின் மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார்.
ரஷ்ய அரசு தொலைக்காட்சியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய புடின் “உக்ரேனில் தற்போதைய அரசை அகற்றிவிட்டு இராணுவம் ஆட்சி அதிகாரத்தில் அமர வேண்டும் என்றும் அதிகாரத்தை இராணுவம் கைப்பற்றிய நிலையில் பேச்சுவார்த்தை மூலம் எளிதாக தீர்வினை எட்ட முடியும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.