பதுளையில் தனியார் பஸ் ஊழியர்களுக்கும் அதே பாதையில் இயங்கும் அரச பஸ் ஊழியர்களுக்கும் இடையில் நேற்று (25) மாலை பதுளை மத்திய பஸ் நிலையத்தில் மோதல் ஏற்பட்டுள்ளது.
இதன்போது, காயமடைந்த அரச ஊழியர்கள் இருவர் பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், தனியார் பஸ் சாரதி மற்றும் உதவியாளர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்துள்ளார்.
பஸ் இயங்கும் நேரம் குறித்த வாக்குவாதத்தின் போது, தனியார் பஸ் சாரதி, அரச பஸ் சாரதி மற்றும் நடத்துனரை கத்தியால் குத்தி காயப்படுத்தியுள்ளார் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.