பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழப்பு. மற்றொரு உத்தியோகஸ்தர் படுகாயம்!
பூனகரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றொருவர் படுகாயம்.
இச்சம்பவத்தில் திருகோணமலை காந்திபுரத்தைச் சேர்ந்த கணேசரட்ணம் ஹரிகரன் எனும் 24 வயதான பொலிஸ் உத்தியோகத்தரே உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது:-
மன்னார் பொலிஸ் நிலையத்தில் பணிபுரியும் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களும் யாழ்ப்பாணம் சென்று மீள மன்னார் செல்லும் போது பூனகரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சங்குப்பிட்டி பாலத்தை அண்மித்த பகுதியில் மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் ஹரிகரன் எனும் பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழந்துள்ளார். மற்றொரு பொலிஸ் உத்தியோகத்தர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் பூனகரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.