வடக்கு மாகாணத்தில் கடந்த ஆண்டு மாத்திரம் 52 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாக கோரப்பட்டதற்கு அமைவாக வழங்கப்பட்டுள்ள பதிலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, வடக்கில் 52 பேர் கடந்த ஆண்டு கொலை செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகத்தில் 129 பேர் கைதாகியுள்ளனர். இவர்களில் 38 பேர் மாத்திரம் நீதிமன்றத்தின் ஊடாகப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.