ஆழிப் பேரலையால் காவு கொள்ளப்பட்டவர்களது 17 வது நினைவேந்தல் இன்று (26) உடுத்துறை சுனாமி நினைவாலயத்தில் இடம் பெற்றது.
இவ் நினைவேந்தல் நிகழ்வில் பொது ஈகை சுடரினை நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அவர்களும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம். கே.சிவாஜிலிங்கம், வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர் கு.பிரபாகரமூர்த்தி உட்பட பலரும் சுடரினை ஏற்றி வைத்தனர்.
இவ் நினைவேந்தல் நிகழ்வில் ஆழிப்பேரலையால் உயிரிழந்தவர்களின் உறவுகளும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.