உங்களுக்கு உல்லாச வாழ்வு எமக்கு பட்டிச் சாவா! யாழிலும் நாளை போராட்டம்!
விலை உயர்வு மற்றும் பொருளாதார நெருக்கடி நிலையினைக் கண்டித்து நாளை சனிக்கிழமை காலை (02) யாழ்ப்பாணத்தில் போராட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
“உங்களுக்கு உல்லாச வாழ்வு எங்களுக்கு பட்டினிச் சாவா? மக்களே வாரீர் கோத்தா, மஹிந்த, பஸில் ஆட்சியிடம் நியாயம் கேட்போம்” எனும் கோஷத்துடன் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இப்போராட்டத்தில் மக்களை கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டத்தினை நாளை சனிக்கிழமை (02) காலை 10 மணிக்கு யாழ்ப்பாணம் பேரூந்து நிலையம் முன்பாக புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் வடபிராந்திய செயலணி ஏற்பாட்டு செய்துள்ளது.