பதின்ம வயதுச் சிறுமிகள் இருவர் மாயம்!
முல்லைத்தீவு புதுமாத்தளன் பகுதியைச் சேர்ந்த இரண்டு சிறுமிகள் காணாமல் போயுள்ளதாக பொலிசாரிடம் முறையிடப்பட்டுள்ளது.
14 மற்றும் 15 வயதுடைய இரண்டு மாணவிகளைக் காணவில்லை என்று அவர்களது பெற்றோர் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். நேற்று முன்தினம் அம்பலவன்பொக்கணையில் உள்ள மாலை வகுப்புக்கு சென்ற இவர்கள் பின்னர் வீடு திரும்பவில்லை.
இதனையடுத்து பெற்றோர் தேடியதில் அவர்கள் மாலை நேர வகுப்பில் கலந்து கொள்ளவில்லை என்று தெரியவந்துள்ளது. இதனையடுத்து சிறுமிகளின் பெற்றோர் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளனர். முல்லைத்தீவு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.