மக்களை அச்சுறுத்திய இராணுவத்தினருடன் முரண்பட்ட பொலிஸார் மீது நடவடிக்கை!
நாடாளுமன்றத்தைச் சுற்றி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த போது இலக்கத் தகடற்ற மோட்டார் சைக்கிளில் ஆயுதங்களுடன் வந்த இராணுவத்தினர் மக்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டனர்.
இதன்போது கடமையிலிருந்த பொலிஸார் இராணுவத்தினரைத் தடுத்து விசாரணைகளை மேற்கொண்டு எச்சரித்து அனுப்பினர். இந்நிலையில் இராணுவத்தினரை தடுத்து விசாரித்து அச்சுறுத்தல் விடுத்த பொலிஸாருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு இராணுவத் தளபதி சவேந்திர சில்வா பொலிஸ்மா அதிபரிடம் கோரியுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.