‘வெடகரன்ன அபே விருவா’பாடலை எழுதியவர் மக்களிடம் மன்னிப்பு கோரினார்!
கோத்தபாய ராஜபக்சவின் தேர்தல் பிரச்சாரத்திற்காக ‘வெட கரன்ன அபே விருவா’ எனும் பாடலை எழுதிய பசன் லியனகே மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளார்.
‘குறித்த பாடலினால் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளீர்கள் என்றால் நான் உங்கள் அனைவரிடமும் பகிரங்கமாக மன்னிப்பு கோருகிறேன்’ என தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது
எந்தவொரு அரசியல் கட்சிக்கும் ஆதரவு வழங்கவில்லை. பாடலினால் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளீர்கள் என்றால் நான் அனைவரிடமும் மன்னிப்பு கோருகிறேன். எனது பாடலை விருப்பத்துடன் கேட்டமையினாலேயே நான் இந்த இடத்தில் இருக்கிறேன்.
அதனால் இந்த சந்தர்ப்பத்தில் நான் உங்களுடன் இருக்கிறேன்.அனைத்து சந்தர்ப்பங்களிலும் ஆட்சியில் இருந்த கட்சிகளின் பின்னால் இனியும் செல்ல வேண்டாம். நாட்டை கட்டியெழுப்ப புதிய தரப்பிற்கு சந்தர்ப்பம் வழங்குவோம். அன்று தொடக்கம் சொந்த நலனுக்காக சுரண்டியவர்களாலேயே இன்று இந்த நிலை உருவாகியுள்ளது. இல்லை என்றால் இதற்கு முன்னர் இந்த நாடு அபிவிருத்தி அடைந்திருக்கும்’ என தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.