ஜனாதிபதியின் கோரிக்கையை நிராகரித்தது கூட்டமைப்பு!
இலங்கையில் ஏற்பட்டிருக்கும் நெருக்கடி நிலையை அடுத்து அனைத்து கட்சிகளையும் ஒன்றிணைத்து இடைக்கால அரசு ஒன்றை நிறுவ ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச விடுத்த வேண்டுகோளை தமிழ்த்தேசிய கூட்டமைப்பு நிராகரித்துள்ளது.
தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் முடிவினை இன்றைய தினம் ஊடக சந்திப்பில் தெரிவித்தார் கூட்டமைப்பின் முக்கியஸ்தரான தர்மலிங்கம் சித்தார்த்தன். ஜனாதிபதியின் இடைக்கால அரசு கோரிக்கையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிராகரிப்பதாக சித்தார்த்தன் தெரிவித்தார்.
கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் அமைச்சுப் பதவியை ஏற்றுக்கொள்ளப்போவதாக செய்திகள் வெளியாகிய நிலையில் ஜனாதிபதியின் கோரிக்கையை நிராகரிப்பதாக கூட்டமைப்பின் சார்பில் அதன் முக்கியஸ்தர் ஊடகங்களுக்கு தெளிவுபடுத்தியுள்ளார்.