ஜனாதிபதித் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல்கள் ஆணைக்குழு தயார் செய்துள்ளதாக அதன் தலைவர் ஆர்.என்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்தார்.
ஜனாதிபதி தேர்தலை இவ்வருட இறுதியில் நடத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலுக்காக ஏற்கனவே 1000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர் செலவுகளைப் பொறுத்து மேலும் பணம் பின்னர் கிடைக்கும் எனவும் தெரிவித்தார்.
இதேவேளை ஜனாதிபதித் தேர்தலுக்குத் தேவையான எழுதுபொருட்கள் உள்ளிட்ட பொருட்களை கொள்வனவு செய்வதற்கும் ஆணைக்குழு செயற்பட்டு வருகின்றது.
ஜனாதிபதி தேர்தலே முதலில் நடத்தப்படும் என்றும் ஜனாதிபதி அண்மையில் அறிவித்திருந்தார். எவ்வாறாயினும் அந்த அறிக்கையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.