அரசியல்வாதி வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சிறுமியின் சடலம் மீட்பு!
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செல்வநகர் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் 17 வயதான சிறுமியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. அரசியல்வாதி ஒருவரின் பண்ணை வீட்டில் சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
செல்வநகர் கிழக்கு பகுதியில் வசிக்கும் அரநாதன் ரோஜா எனும் 17 வயதான சிறுமியே மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.இச்சம்பவம் நேற்று இரவு நிகழ்ந்துள்ளது.
காதல் பிரச்சினை காரணமாகவே சிறுமி தவறான முடிவு எடுத்ததற்கு காரணமாக இருக்கலாம் என ஆரம்ப விசாரணையில் தெரியவந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காத்தான்குடி பகுதியில் உள்ள அரசியல் வாதியின் பண்ணை வீட்டினை பராமரிப்பதற்காக குடும்பம் ஒன்றினை குடியமர்த்தியுள்ளனர். இவ்வாறு குடியிருந்த சிறுமியே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.