13ம் திருத்த சட்டத்திற்கு எதிராக பேரணி!
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் 13ம் திருத்தத்திற்கு எதிராக இன்று மதியம் வவுனியாவில் பேரணி நடைபெற்றது.
தமிழர்களுக்கான தீர்வாக 13ம் திருத்த சட்டத்தை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் 13ம் திருத்த சட்டத்தை எதிர்ப்பதோடு சமஸ்டியை வலியுறுத்தி இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இப் பேரணியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார், கஜேந்திரன் மற்றும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் சட்ட ஆலோசகர் காண்டீபன் உட்பட பெருமளவான மக்கள் கலந்துகொண்டனர்.