யாழில் துயரம். குடும்பஸ்தர் மரணம். பல்கலைக்கழக மாணவன் காயம்!
யாழ்ப்பாணம் மூளாய் பகுதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பல்கலைக்கழக மாணவன் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்று இரவு (20) 9 மணியளவில் நிகழ்ந்துள்ளது.
குறித்த விபத்தில் காரைநகர் கருங்காலியைச் சேர்ந்த சங்கரப்பிள்ளை நித்தியானந்தராசா எனும் குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார். பல்கலைக்கழக மாணவன் காயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.