மன்னார் வைத்தியசாலைக்குள் நுழைந்து சிகிச்சை பெற்றவரின் கழுத்தில் வெட்டு!
மன்னார் பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் மீது இனந்தெரியாத நபர் கத்திவெட்டு தாக்குதல்.
இன்று அதிகாலை மூன்று மணியளவில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. சிகிச்சை பெற்றவரின் கழுத்தை அறுக்க முற்பட்ட போது சத்தம் போட்டதால் கத்தி வெட்டு தாக்குதலை மேற்கொண்டவர் கத்தியை போட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.
காயத்திற்குள்ளானவரை வவுனியா வைத்தியசாலைக்கு மாற்றி சிகிச்சை அளிக்க முற்பட்ட போது தனது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று கூறி வைத்தியசாலையில் இருந்து வீட்டிற்கு சென்றுள்ளார்.
மாட்டுவண்டிச் சாவாரி தொடர்பில் ஏற்பட்ட முரண்பாட்டினை அடுத்து இருவர் கொல்லப்பட்ட நிலையில் இச்சம்பவம் பழிவாங்கும் சம்பவமாக நிகழ்ந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.