தனது மகளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய தந்தைக்கு மூன்று குற்றச்சாட்டுகளின் கீழ் ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் தலா 18 வருடங்கள் வீதம் 54 வருட கடூழிய சிறைத்தண்டனையும், 30 ஆயிரம் ரூபா அபராதம் செலுத்துவதுடன் மூன்று சிறைத் தண்டனையையும் சமநேரத்தில் அனுபவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
அம்பாந்தோட்டை சமோதகம பிரதேசத்தில் வசிக்கும் 46 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவருக்கு இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குற்றஞ்சாட்டப்பட்டவர் தனது மனைவி வெளிநாட்டில் பணிபுரியும் போது மதுபோதையில் தனது மகளை பல சந்தர்ப்பங்களில் துஸ்பிரயோகம் செய்துள்ளார்.
தந்தையின் தொல்லை தாங்க முடியாமல் அப்பகுதியில் உள்ள சிறுவர் பாதுகாவலரிடம் மகள் கூறியதையடுத்து அம்பாந்தோட்டை பொலீஸார் சிறுமியை மீட்டனர்.
சிறுமியிடம் பெற்றுக்கொண்ட வாக்குறுதிகளை அடுத்து சிறுமியின் தந்தைக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்தனர். குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் சந்தேகத்துக்கிடமின்றி அரசு தரப்பு நிரூபித்ததால் குற்றம் சாட்டப்பட்டவர் மூன்று குற்றச்சாட்டுகளிலும் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டதையடுத்து 54 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்தது.