முல்லை சிறுமிகள் துஷ்பிரயோகம், 7பேர் கைது. விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள்!
முல்லைத்தீவு சிறுமிகள் துஷ்பிரயோகம் தொடர்பில் மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவைச் சேர்ந்த சந்தேகநபர்கள் கைது!
முல்லைத்தீவு புதுமாத்தளன் பகுதியைச் சேர்ந்த 15 மற்றும் 14 வயதான சிறுமிகள் தனியார் வகுப்பிற்கு செல்வதாகக் கூறி முகநூலில் அறிமுகமாகிய மட்டக்களப்பு இளைஞனைச் சந்திக்க சென்ற போது முகநூல் நன்பர் மற்றும் அவரது நன்பரினாலும் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
புதுக்குடியிருப்பிலிருந்து பேரூந்தில் மட்டக்களப்பிற்கு சென்ற சிறுமிகளை சிறிய ரக பஸ் ஒன்றில் ஏற்றிச் சென்று வாகனத்துள் வைத்து துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளனர். இது தொடர்பில் மட்டக்களப்பு பகுதியைச் சேர்ந்த 17 வயதான இரண்டு சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டதுடன் துஷ்பிரயோகத்திற்கு பயன்படுத்தப்பட்ட வாகனமும் மீட்கப்பட்டுள்ளது.
அதேவேளை குறித்த சிறுமிகள் மட்டக்களப்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு வந்த போது யாழ் நகர்ப் பகுதியில் உள்ள வர்த்தகர் ஒருவர் சிறுமிகளை நன்பர் ஒருவரது வீட்டிற்கு அழைத்துச் சென்று நன்பர்களுடன் சேர்ந்து பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளனர். இது தொடர்பில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 30 மற்றும் 35 வயதான 3 சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.
மேலும் குறித்த சிறுமிகளிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் குறித்த சிறுமிகளில் ஒருவரை இச்சம்பவத்திற்கு முன்னர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சிறுமியின் காதலனான 17 வயதுடையவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சிறுமியின் உறவினர் ஒருவரும் சிறுமியை மன்னாரிற்கு அழைத்துச் சென்று சிறுமியின் கைகளைக் கட்டி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. குறித்த உறவினரும் கைதுசெய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார்.
சிறுமிகள் துஷ்பிரயோகம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸாரால் இதுவரை 7 பேர் கைதுசெய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். சிறுமிகள் பலரால் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டமை மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.